https://ift.tt/wbal6YV WC 2022 | அல்வாரெஸ்; மெஸ்ஸி மேஜிக் - குரோஷியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அர்ஜென்டினா

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா.

முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. என்றாலும், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல் கோல் அடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post