சோனியா, ராகுலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் - அமலாக்கத் துறை நடவடிக்கை https://ift.tt/3gJ5HVF

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post