புதுடெல்லி: தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) துப்புரவு தொழிலாளி, 37 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கேயே உதவி பொது மேலாளராகி சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கடந்த 1964-ல் பிறந்தவர் பிரதிக் ஷா டோண்ட்வாக்கர். சதாஷிவ் கது என்பவருடன் இவருக்கு 16 வயதில் நடந்த திருமணம் காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார் பிரதிக் ஷா.மும்பை எஸ்பிஐ.யின் ஒரு கிளை அலுவலகத்தில் சதாஷிவ் அலுவலக உதவியாளராக இருந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த மகனுடன் சொந்த கிராமத்துக்கு அனைவரும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் சதாஷிவ் திடீரென உயிரிழந்தார். இதனால், தனது 20 வயதில் இளம் விதவையான பிரதிக் ஷாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil