கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: விரைந்தது மத்தியக் குழு https://ift.tt/sfmXDkR

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து மத்திய மருத்துவக் குழு விரைந்துள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பின் எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அமீரகத்தில் இருந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு திரும்பியுள்ளார். அவர் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post