சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 19-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய், 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஷோ டியன் செனை 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் லின்ஹ் நுயெனை 19-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கிலும், சாய்னா நெவால் 21-19, 11-21, 21-17 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியோவோவையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil