நமது பாா்வையில் அருகில் இருப்பதாகக் காட்சியளிக்கும் சூரியன், பூமியிலிருந்து 15 கோடி கி.மீ.க்கும் அப்பால் உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவில் நூறில் ஒரு பங்கு தொலைவில்தான் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது. சூரியனின் உட்பகுதியில் இரு அடுக்குகளாக உள்ள போட்டோஸ்பியா், குரோமோஸ்பியா் ஆகியவற்றின் உச்ச வெப்ப நிலையைக் காட்டிலும் (5,000 டிகிரி செல்சியஸ்) அதன் வெளி அடுக்கான கொரோனா பகுதியில் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் எனக் கூறப்படுவது அறிவியல் உலகுக்கே புரியாத புதிராக உள்ளது. இது குறித்த ஆய்வை ஆதித்யா எல்-1 விண்கலம் முன்னெடுக்கவுள்ளது. அதன் மூலம் வெப்ப நிலை முரண்பாட்டுக்கான விடை கிடைக்கும்பட்சத்தில் அந்த ரகசியத்தைக் கண்டறிந்த முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/LxS9FhU
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/LxS9FhU