https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/8/18/w600X390/81-crore-people-without-food-security-stunning-study.jpgஇதுதான் குஜராத் மாடலா? 38% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்: நிதி ஆயோக்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 38 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என்று நிதி ஆயோக் வெளியிட்ட தேசிய பல பரிமாண ஏழ்மைக் குறியீடு (எம்பிஐ) தெரிவிக்கிறது. அதாவது, குஜராத் மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு (44.45%) ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும், நகரப் பகுதிகளில் 29.97 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைவில், குஜராத் மாநிலம் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியதிருக்கும் என்றே நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை, குஜராத் மாநில ஊட்டச்சத்து நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் அவை எவ்வளவோ முன்னணியில் உள்ளனர் என்பதே. தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் வெளியிடப்பட்டிருக்கம் தரவுகளில், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 39 சதவீதக் குழந்தைகள், அவர்களது வயதுக்கு ஏற்ற உடல் எடையில்லாமல் குறைந்த உடல் எடையுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீணாகும் மற்றும் எடைகுறைவான குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் குஜராத் இரண்டாம் இடத்தில் இருப்பதன் மூலம், அந்த மாநிலம், சுகாதாரத் துறையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.  

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/MtaWFL7

Post a Comment

Previous Post Next Post