https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/8/11/w600X390/first_post_office_of_india.jpgநாட்டின் 'கடைசி' தபால் நிலையமாக அறியப்பட்ட 'முதல்' தபால் நிலையம்!

  ஸ்ரீநகர்: நாட்டின் கடைசி தபால் நிலையமாக சமீப காலம் வரை அறியப்பட்ட தபால் நிலையம், "நாட்டின் முதல் தபால் நிலையம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜம்மு மற்றும் காஷ்மீரின் கேரன் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே கிஷன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே தபால் பின்கோடு எண் 193224-ஐ கொண்ட இந்த தபால் நிலையம் அமைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் ஒரு பக்கம் கிஷன்கங்கா நதியும், மறுபக்கம் நீலம் நதிக்கரையில் கரையின் குறுக்கே அமைந்துள்ள தபால் நிலையம், ஒரு தபால் நிலைய அதிகாரி மற்றும் மூன்று பணியாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இது சமீப காலம் வரை நாட்டின் கடைசி தபால் நிலையமாக அறியப்பட்டது, ஏனெனில் அதைத் தாண்டி தபால்களை அனுப்ப முடியாது. பின்னர், ராணுவம் அதை முதல் தபால் நிலையமாக மாற்றியது. ஏனெனில், இது தொலைதூரத்தின் அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அல்லது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதல் நிலையம். தற்போது, அதன் அருகில் உள்ள அடையாள பலகையில் "இந்தியாவின் முதல் தபால் நிலையம்" என்று எழுதப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அல்லது பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பே இந்த தபால் நிலையம் செயல்பட்டதாக குக்கிராமத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலான எல்லைப் போர் நிறுத்தம் தடைபடாத நிலையில், தபால் நிலைய அலுவலர் ஷாகிர் பட் மற்றும் மூன்று தபால் நிலைய பணியாளர்கள் எல்லையில் துப்பாக்கிச் சூடு அல்லது ஷெல் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவோம் என்ற அச்சமின்றி, கணிசமான அளவில் தபால் விநியோக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள ராணுவத்துக்கும், உள்ளூர் மக்களுக்கும், எல்லை தாண்டி எப்போதாவது நடத்தப்படும் சரமாரியான துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து, தபால் நிலைய பணியாளர்கள் தபால்களை அனுப்புவதில் தயக்கம் காட்டியுள்ளனர். 1947 இல் இரு நாடுகளும் பிளவுபடுவதற்கு முன்பே சிறப்பாக வரும் வரலாற்று சிறப்புமிக்க இந்த தபால் நிலையம், 1965 இல் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான போர் மற்றும் 1998 கார்கில் போரின் போது கூட, மக்கள் மற்றும் ராணுவத் தபால்களை கொண்டு தனது கடமைகளில் இருந்து தபால் துறை விலகியதில்லை. கடந்த 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் தபால் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து தபால் நிலைய அலுவலர் ஷாகிர் பட் வீட்டில் இருந்து தான் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தனது வீட்டிலிருந்து தபால் அலுவலகம் செயல்படுவதற்காக தனக்கு எந்த வாடகையும் வழங்கப்படவில்லை என்றும், தான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் பட் கூறினார். தபால் நிலையத்தில் தன்னுடன் பணிபுரியும் மூன்று பணியாளர்களும், உள்ளூர் மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பலதரப்பட்ட சேவைகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், தகவல் தொடர்பு வசதி (நெட்வொர்க் வசதி) இல்லாததால், நாடு முழுவதும் உள்ள மற்ற தபால் நிலையங்களைப் போன்று இந்த தபால் நிலையத்தினால் டிஜிட்டல் சேவைகளை வழங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு எல்லைப் பகுதி ராணுவமயமாக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் கேரானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்துடன் பார்க்கக் கூடிய பகுதியாக இந்த தபால் நிலையம் மாறி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பட் கூறினார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அதிகாரிகள் கேரான், கர்னா, உரி, குரேஸ் உள்ளிட்ட பல எல்லைப் பகுதிகளை பார்வையாளர்களுக்கு திறந்துவிட்டனர். முன்னதாக, இந்த எல்லைப் பகுதிகள் உள்ளூர் மக்கள் கூட முற்றிலும் அணுக முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/OCM58TA

Post a Comment

Previous Post Next Post