https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/22/large/932373.jpgஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 27-ம் நிலை வீரரான இத்தாலியின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்றசெட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post