தன் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் வழக்கமாக குட்டி கதை ஒன்று சொல்வது வழக்கம். அதேபோல இன்று நடைபெற்று வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசியபோது ஒரு குட்டி கதை சொன்னார். அந்த கதை,
``ஒரு குடும்பத்தில ஒரு அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சிக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு சாப்பிடுவான்.
ஒரு நாள் தங்கை அண்ணன்கிட்ட அன்பு னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு. அன்பு தான் உலகத்தை ஜெயிக்க கூடியது." என்றார். இதையும் குட்டி ஸ்டோரியாவே வச்சுக்கலாம் என அடுத்ததாக ஒன்றைக் கூறினார்.
``1990 -கள்ல எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு். கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியரஸான போட்டியாளரா ஆனாரு. அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரவிட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன் எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை. அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய். உங்ககூட நீங்க போட்டிபோடுங்க.
தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். Compete with Yourself ; Be your own competition! ' என்றார். விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா
from Latest News