https://ift.tt/bOeFKHD ”நீங்கள் முதலில் பார்க்க விரும்பும் படம் வாரிசா? துணிவா?” - நடிகர் வடிவேலு சொன்ன பதில்!

நாய் சேகர் ரிட்டன் பட வெற்றியைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...

”செந்தில் வேல் முருகனை தரிசிக்க வந்தது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. யாருக்கா இருந்தாலும் மனசுல ஏதாவது தோனுச்சுன்னா திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டடெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம் என்பது திருச்செந்தூர் செந்தில் முருகனுடைய வேண்டுதலா நான் நெனைக்கிறேன்” என்றார்.

நீங்கள் முதலில் பார்க்க விரும்பும் படம் வாரிசா துணிவா என நிருபர்கள் கேட்டதற்கு...

image

”எல்லா படமும் நல்லா ஓடணும். பெரிய வெற்றி பெறணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். சினிமா நல்லா இருந்தாதான் எல்லாரும் நல்லா இருக்க முடியும், நான் அடுத்ததா மாமன்னன் என்ற படத்துல நடிக்கிறேன். அடுத்து சந்திரமுகி-2 வருது. அடுத்து விஜய்சேதுபதி சார் கூட நடிக்கிறேன். அதேமாதிரி நல்ல கதையுள்ள படங்களில் நடிக்கிறேன்” என்றார்.

நடிகர் சிங்கமுத்து குறித்து கேட்டதற்கு, நல்லா பேசிக்கிட்டு இருக்கும் போது ஏன்??? என அடுத்த கேள்விக்கு தாவினார்.

மேலும், ”நாய் சேகர் ரிட்டன் ரொம்ப நல்லா வந்துருக்கு. மக்கள் குலுங்கி குலுங்கி சிருச்சுக்கிட்டே பாக்குறாங்க. குடும்பத்தோடு பாக்கவேண்டிய படம். அது குடும்ப படம், கதம்ப படம் கிடையாது. படத்த பாத்தவுங்க எனக்கு போன்பண்ணி வாழ்த்து சொல்றாங்க. பெரிய வெற்றி படமா இருக்குது. தயாரிப்பாளருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இது நல்ல படம்.

image

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த படம் மக்களுக்கு ரொம்ப புடுச்ச படமா இருக்கும். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post