சென்னையில் இயங்கி வரும் “கனவுகள் லைப்லைன் பவுண்டேசன்” எனும் தனியார் அறக்கட்டளை நிறுவனம் பார்வைச் சவால் கொண்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பார்வைச் சவால் கொண்ட பட்டதாரிகள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை இலவசமாக இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 83 பார்வைச் சவால் கொண்ட பட்டதாரிகள் தற்போது இவ்வகுப்புகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்களையும் இலக்கியங்களையும் ஒலி வடிவில் வழங்கும் சேவையையும் இந்த அறக்கட்டளை மேற்கொள்கிறது. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை பார்வைச் சவால் கொண்டவர்கள் எப்படி பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு வகுப்புகளையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
அம்மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்த சிறப்பு வகுப்புகளையும் நடத்தி வரும் இவர்கள், பார்வைச் சவால் கொண்டவர்களிடம் இருக்கும் இசை உள்ளிட்ட சிறப்பு திறமைகளை அடையாளம் கண்டு அதை ஊக்குவிக்கும் பணியையும் செய்ய துவங்கி உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News