https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2022/10/1/w600X390/upi050130.jpgக்யூஆர் கோடு மோசடி பற்றி தெரியுமா? எச்சரிக்கையாக இருங்கள்!


க்யூஆர் கோடு என்பது, குயிக் ரெஸ்பான்ஸ் என்பதன் சுருக்கமே. இந்த க்யூஆர் கோடுகள், மிகத் துல்லியமாக செயல்படுகின்றன. அதனை நமது ஸ்மார்ட்போன்களில் ஸ்கேன் செய்ததும் அதன் யூஆர்எல்-ஐ ஒரு வினாடியில் படித்துக்காட்டிவிடுகிறது.

அந்த யூஆர்எல் மூலம், ஒரு இணையதளத்துக்கோ அல்லது செயலிக்கோ அல்லது ஒரு வங்கிக் கணக்கு எண்ணுக்கோ நேரடியாக சென்றுவிடலாம். க்யூஆர் கோடு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது, நேரடியாக வங்கிக் கணக்கைப் போட்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது நேரிடும் தவறுகள் தவிர்க்கப்படலாம். 

ஆனால், இவ்வளவுக் கச்சிதமாக செயல்படும் க்யூஆர் கோடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்யலாம் என்று சிந்திக்காமல் இருந்திருப்பார்களா மோசடியாளர்கள்? எனவே, இனி க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்யும்போதும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில், இளைஞர் ஒருவர் க்யூஆர் கோடு மோசடி மூலம் ரூ.50 ஆயிரத்தை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழைய வீட்டு உபயோகப்பொருள் ஒன்றை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்த அந்த நபரிடம், மோசடியாளர் பேசி, பொருளை தான் வாங்கிக் கொள்வதாகவும், ஒரு க்யூஆர் கோடை தாம் அனுப்புவதாகவும், அதனை இளைஞர் ஸ்கேன் செய்தால், உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும் என்று கூறி க்யூஆர் கோடை அனுப்பியிருக்கிறார். அந்த க்யூஆர் கோடை இளைஞர் ஸ்கேன் செய்ததும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. 

எனவே, முன்பின் தெரியாத, இதுபோன்ற மோசடியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/Dg7NSEA

Post a Comment

Previous Post Next Post