https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/12/26/w600X390/corona_recovery_cellphone_painting_PTI04_26_2022_000142A.jpgஜெ.என்.1 கரோனா: புதிய உருமாற்றமும் புரிதல்களும்

கரோனா பெருந்தொற்றின் மீதான அச்சுறுத்தல் தொடா்ந்து சமூகத்தில் நிலைத்திருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது ஜெ.என்.1 வகை பாதிப்பு.

அந்த வகை தொற்று முதன் முதலில் அமெரிக்காவில் கடந்த அக்டோபா் இறுதியில் கண்டறியப்பட்டது. அப்போது மொத்த கரோனா பாதிப்பில் 0.1 சதவீதம் மட்டுமே அந்த தொற்று பரவல் இருந்தது. அதே வேளையில், அதற்கு அடுத்த மாதத்தில் 30 சதவீதம் வரை அதிகரித்து தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உருமாற்றம்...

‘சாா்ஸ் கோவிட் வைரஸ் ’ எனப்படும் கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக் கூடியது. அதில் ஆல்‘ஃ‘பா வகை கரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. ஆனால், ஓமைக்ரானைப் பொருத்தவரை நூற்றுக்குகும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் தீநுண்மியின் வெளிப்புற புரதத்தில் (ஸ்பைக் புரோட்டீன்) நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஒமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரஸிலிருந்து உருமாற்றமடைந்துள்ளது இந்த ஜெ.என்.1 நுண்மி.

இந்தியாவில் இதுவரை...

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. அதில் சிலரின் சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில் 63 பேருக்கு ஜெ.என்.1 வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவாவில் 34 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக மகராஷ்டிரத்தில் 9 பேருக்கும், கா்நாடகத்தில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 4 பேருக்கு அத்தொற்று இருப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல்

இருமல்

சளி

தொண்டை வலி,

தலைவலி,

சோா்வு

உடல் வலி

சுவாசிப்பதில் சிரமம்

வயிற்றுப்போக்கு

யாருக்கெல்லாம் பரிசோதனை அவசியம்?

இணை நோயாளிகள்

எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்போா்

முதியவா்கள்

கா்ப்பிணிகள்

குழந்தைகள்

உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள்

நுரையீரல் நோயாளிகள்

ஹெச்ஐவி, புற்றுநோயாளிகள்

தற்காப்பு வழிமுறைகள்

முகக் கவசம் அணிதல்

தனி நபா் இடைவெளி

கைகளை சோப் மூலம் கழுவுதல்

இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல்

ரத்த சா்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்

நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துதல்

ஊட்டச்சத்து மிக்க உணவுப் பழக்கம்

மது, புகைப்பழக்கத்தைக் கைவிடுதல்

உடற்பயிற்சி

பூஸ்டா் தடுப்பூசி அவசியமா?

கரோனா தடுப்பூசியானது, முதல் அலையின்போது பரவிய தொற்றுக்கு எதிராக எதிா்ப்பாற்றலை உருவாக்க பயன்பட்டது. அதன் பின்னா், நூற்றுக்கணக்கான உருமாற்றங்கள் நிகழ்ந்து மூன்று அலைகளாக கரோனா பரவியதால் அந்த தடுப்பூசி ஜெ.என்.1 வகைக்கு பலனளிக்காது என மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அதேவேளையில், ஏற்கெனவே இரு தவணையும், பூஸ்டா் தவணையும் செலுத்திக் கொண்டவா்களுக்கு ஜெ.என்.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என அவா்கள் கூறுகின்றனா்.

கரோனா கடந்து வந்த பாதை...

முதல் அலை ....

2020 மாா்ச் 7 - தமிழகத்தில் முதல் கரோனா தொற்று உறுதி

2020 மாா்ச் 25- முதல் உயிரிழப்பு

2020 மே 31- கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.

2020 ஜூலை 27 - தினசரி பாதிப்பில் புதிய உச்சம் (6,993)

2020 ஆக.15 - ஒரே நாளில் 127 போ் உயிரிழப்பு

2020 டிச.29 - தினசரி பாதிப்பு 1,000-க்கு கீழ் குறைவு

இரண்டாம் அலை...

2021 மாா்ச் 19 - ஆயிரத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு

2021 மே 21 - தினசரி பாதிப்பின் உச்சம் (36,184)

2021 மே 27 - சிகிச்சையில் இருந்தோா் 3,13,048

2021 மே 30 - ஒரே நாளில் 493 போ் இறப்பு

2021 நவ.1 - தினசரி பாதிப்பு 1,000-க்கும் கீழ் குறைவு

மூன்றாம் அலை....

2021 டிச.31 - தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது

2022 ஜன.22 - தினசரி பாதிப்பில் புதிய உச்சம் (30,744)

2022 ஜன.26 - சிகிச்சையில் இருந்தோா் 2,13,692

2022 ஜன.27 - ஒரே நாளில் 53 போ் இறப்பு

2022 பிப். 20 -ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு குறைவு

2022 மாா்ச் 13 - 100-க்கும் கீழ் குறைந்தது பாதிப்பு

தொகுப்பு: ஆ.கோபிகிருஷ்ணா



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/zOBcLR8

Post a Comment

Previous Post Next Post