https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/10/12/w600X390/cmda.jpgநீர்நிலைகளை மறுவகைப்படுத்தும் சிஎம்டிஏ: நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா?

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்நிலைகளை ஆக்ரமிக்கும் கட்டடங்களை சி.எம்.டி.ஏ. மறுவகைப்படுத்த ஒப்புதல் அளித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்நிலைகளை ஆக்ரமித்து  குடியிருப்புகளை கட்டுவதற்கு வசதியாக 'குடியிருப்பு பயன்பாட்டு மண்டலமாக' மாற்றியுள்ளது. சென்னை மூர்திங்நகர் தெருவில் 74.57 ஏக்கர் நிலத்தை குடியிருப்புகள் கட்ட மாநில அரசு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், அந்த இடத்தில் 4.24 ஏக்கர் பரப்பில், இதற்கு முன்பு நீர்நிலை இருந்தது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.

சிஎம்டிஏ கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் நீர்நிலைப் பகுதியை ‘குடியிருப்புக்கான இடம்’ என மறுவகைப்படுத்துவதற்கான உத்தரவுகளை வெளியிட்டது. இதன் மூலம், நீர்நிலையை குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்றும் நடவடிக்கை அனுமதிக்கப்படாது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டாவது மிகப்பெரிய திட்டத்தின்படி, நீர்நிலையை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றக்கூடாது. எனினும், முந்தைய சிஏஜி அறிக்கை 2016-ல் ‘சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் விளக்கம்’ என்ற அறிக்கையில் அதை முன்னிலைப்படுத்திய போதிலும், நீர்நிலைகளை குடியிருப்புகளாக மாற்றுவதில் விதிமீறல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.

இது குறித்து மாநில அரசு தனது விளக்கத்தில், சிஎம்டிஏ சில பகுதிகளை நீர்நிலைகளாக அறிவித்துள்ளது. ஒரு திறமையான நிர்வாகத்தின்படி, சிஎம்டிஏ முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே, சில நிலப்பரப்புகளை  மறுவகைப்படுத்தியுள்ளது. நீர்நிலைகளில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு நிலபயன்பாடு மறுவகைப்படுத்தப்பட்டதால் அதற்கு லேஅவுட் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிஎம்டிஏவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் ஒரே துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ்தான் இருக்கின்றன. எனவே, இவ்விரண்டும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்ற பின்னரே உரிய பணிகளை தொடங்கியிருக்க வேண்டும் என்பதால் பதில் ஏற்கத்தக்கது அல்ல என்று சிஏஜியின் தணிக்கை அறிக்கை கூறுகிறது. 

வருவாய்த் துறையானது நிலத்தை வகைப்படுத்துதல் அல்லது மறுவகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகுதிவாய்ந்தத் துறையாகும், ஆனால், அதிகாரமிக்க வருவாய்த் துறையிடம் இருந்து நிலத்தை மறுவகைப்படுத்துதலுக்கு ஒப்புதல் பெறுவது குறித்து அரசின் விளக்கத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்று சிஏஜி அறிக்கை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/pYeSF6K

Post a Comment

Previous Post Next Post