https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/10/5/w600X390/bike_accident.jpgஇருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?

 

புது தில்லி : இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் காப்பீடு எடுத்திருப்பார்கள். அதன் அவசியத்தை உணர்ந்தோ அல்லது அறியாமலோ கூட பலரும் ஆண்டுதோறும் காப்பீட்டைப் புதுப்பித்து விடுகின்றனர்.

அதாவது, இருசக்கர  வாகனம் எனப்படும் பைக்குக்கு காப்பீடு என்பது ஒரு பொறுப்பான இருசக்கர வாகன உரிமையாளர் வைத்திருக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

வாகனக் காப்பீடு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதப்படாவிட்டாலும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது, குறிப்பாக மூன்றாம் தரப்பு காப்பீடு, சாலையில் விபத்துகள் நேரிடும்போது நிதி மற்றும் சட்ட சிக்கல்களில் இருந்து ஒருவரைக் காப்பாற்றும் ஆயுதமாக மாறும்.

இந்தக் கட்டுரையில், மூன்றாம் தரப்பு காப்பீடு ஏன் எடுக்க வேண்டும்? அதன் சிறப்பம்சங்களை ஆராயலாம்.

அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில், குறைந்தபட்ச காப்பீடு இல்லாமல் இருசக்க வாகனம் ஓட்டுவது சட்டத்திற்கு எதிரானது. மூன்றாம் தரப்பு காப்பீடு பொதுவாக ஒருவர் பைக்கை ஓட்டும் போது மற்றவரின் சொத்து அல்லது நபருக்கு ஏற்படுத்தக்கூடிய சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் இந்த தேவையை பூர்த்தி செய்கிறது.

பொதுவாகவே இருசக்கர வாகன விபத்துகள் மோசமானதாகவும், பாதிக்கப்படுபவர்கள் அதிக விலை கொடுப்பதாகவும் இருக்கலாம், செலவுகள் திடீரென அதிகரிக்கலாம். காப்பீடு இல்லாமல், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது விபத்து ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்வதற்கு நாமே  நிதிப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆனால், இருசக்கர வாகனக் காப்பீடு எடுத்திருந்தால், ஒருவர் விபத்தில் சிக்கிய வாகனத்தின் செலவுடன் உடலில் ஏற்படும் காயங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும்.

விரிவான இருசக்கர வாகனக் காப்பீடு இதைமட்டுமல்ல, திருட்டு, வன்முறையில் சேதம், இயற்கை பேரழிவுகள் மற்றும் விபத்துகள் போன்ற பல்வேறு அபாயங்களுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. இதன்மூலம், விபத்தில் சிக்கினாலும் முழு நிதிச் சுமையையும் நாமே ஏற்க வேண்டிய அவசியமில்லாமல், காப்பீட்டின் அடிப்படையில் வாகனத்தை பழுதுபார்த்துக்கொள்ளலாம் அல்லது புதியதை வாங்கிக்கொள்ளலாம். 

ஒருவேளை, மூன்றாம் தரப்பு காப்பீடு போதுமான பாதுகாப்பை அளிக்கவில்லை என்று கருதினாலோ அல்லது  கூடுதல் பாதுகாப்புப் பெற விரும்பினாலோ விரிவான காப்பீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு காப்பீடு

மற்றவர்களைப் பாதுகாத்தல்: முதல் பணியாக, மூன்றதாம் தரப்பு காப்பீடானது,  ஒருவர் விபத்தினால் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது  அவர்களையும் அவர்களின் சொத்துகளையும் பாதுகாக்க உதவுகிறது. 

ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தால், அது அந்த நபரின் தவறு எனத் தெரியவந்தால் மூன்றாம் தரப்பினருக்கு நீங்கள் ஏற்படுத்தும் சேதங்கள் அல்லது காயங்களுக்கு இந்த வகை காப்பீடு பயனளிக்கும். இதில் மருத்துவக்  கட்டணம், வாகனம் அல்லது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் ஏதேனும் வழக்குத் தொடரப்பட்டால் சட்டக் கட்டணங்கள் ஆகியவற்றை இந்த காப்பீடு ஏற்கும்.

சட்டப்பூர்வ விதிமுறைகள்: மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது பெரும்பாலும் சட்டப்பூர்வ தேவை. அது இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் அபராதம் அல்லது இருசக்கர வாகன உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.

எனவே, வாகன ஓட்டிகள், அவசியம் காப்பீடு இருப்பதை உறுதிசெய்வது ஒருவரை சட்டரீதியாக பாதுகாப்பதுடன் அவர் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தீங்கிற்கும் அவரே பொறுப்பு என்றாலும், பண இழப்பீடுக்கு அவர் பொறுப்பல்ல என்பது மிகப்பெரிய நிம்மதியை அளிக்கலாம்.

ஒருவர் மூன்றாம் தரப்பு காப்பீட்டை எடுப்பது சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்கிறது. சாலை விபத்துகள் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த காப்பீட்டைப் எடுப்பதன் மூலம், காயமடைந்த தரப்பு, அவர்களுக்குத் தகுதியான இழப்பீட்டைப் பெறுவதை உறுதிசெய்ய வழிகுக்கும். 

ஒரு சிறந்த சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக நீங்கள் இருப்பதை இது உறுதி செய்கிறது.
 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/sbrqnZS

Post a Comment

Previous Post Next Post