புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற தணிக்கையில் கவலைதரும் விஷயமே வெளியாகியிருக்கிறது. புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற தணிக்கையில் கவலைதரும் விஷயமே வெளியாகியிருக்கிறது. பேருந்து நிலையத்தின் வடிவமைப்பில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாக தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு தரைப்பகுதி என்றால் அதில் தொடர்ச்சியற்று, ஆங்காங்கே மேடு பள்ளங்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தொட்டுணரும் வழிகள் இன்மை, மிக நீண்ட மற்றும் இடையில் நிறுத்தமில்லா சாய்தளங்கள் அதிகம் இருப்பது சக்கர நாற்காலிகளில் வருவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 393.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், விரைவில் தென் மாநிலங்களை நோக்கிச் செல்லும் பேருந்து நிலையமாக மாறவிருக்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கிறதா என்ற தணிக்கை நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினரால் இந்த தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. இதனை சிஎம்டிஏ அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர். இதில், பல குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1:12 என்ற விகிதத்தில்தான், சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும். அதாவது, தொடர்ச்சியாக 9 மீட்டருக்குத்தான் சாய்தளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு எந்த இடத்திலும் நிறுத்தம் இல்லாமல் தொடர்ச்சியாக 25 மீட்டருக்கு சாய்தளம் அமைக்கப்பட்டிருப்பது. இது சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதேபோல், தொட்டுணரக்கூடிய பாதை பார்வைக் குறைபாடுள்ள பயணிகளுக்கு பேருந்து நிறுத்துமிடத்துக்கு மட்டும் மட்டுமே வழிகாட்ட உதவுகிறது. பேருந்து நுழைவாயில்கள் குறுகியதாக நிறுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், கடைகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ அணுகலைப் பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதமே அறிவுறுத்தியிருந்தது. எனவே, இந்த பேருந்து நிலையத்தை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்ற அரசு மேலும் செலவு செய்ய வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/OMbLHsT
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/OMbLHsT