உலகளவில், பசி, பட்டினி காரணமாக, சுமார் 70 கோடி பேருக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் அல்லது அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமா என்பதே தெரியாது என ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில், பசி, பட்டினி காரணமாக, சுமார் 70 கோடி பேருக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் அல்லது அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமா என்பதே தெரியாது என ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக உணவு திட்ட செயல் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பேசுகையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் இது அதிகரித்துக்கொண்டே போகிறது. நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட கால நெருக்கடிகளால், உலகளாவிய மனிதாபிமானத் தேவைகளைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார். இது மனிதாபிமான சமூகத்தின் புதிய யதார்த்தம் - நமது புதிய இயல்பு - மேலும் பல ஆண்டுகளாக இதுபோன்ற வீழ்ச்சியை கையாண்டுவருகிறோம் என்றார். மேலும், ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், 79 நாடுகளில் உலக உணவு திட்டத்தின் கீழ் நடத்திய மதிப்பீட்டின்படி, 78.3 கோடி மக்கள் - உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவர் - இன்னும் ஒவ்வொரு இரவும் பசியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள். இந்த ஆண்டு 34.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், இது கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கோடி மக்களாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, ஆண்டுதோறும் அதிகரிக்க, போர், பொருளாதார பாதிப்பு, பருவநிலை பாதிப்பு உள்ளிட்டவையும் பெரும்பங்காற்றுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/OMbLHsT
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/OMbLHsT