https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/9/11/w600X390/nh_205.jpgஅகலப்படுத்தப்படும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை


சென்னை: சென்னையில் இருந்து மும்பை மற்றும் திருப்பதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படவிருக்கிறது.

சென்னை- மும்பை மற்றும் திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தொலைவு என்பது சென்னை-சூரத் எக்ஸ்பிரஸ் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சாலையானது இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் சென்று, சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரத்தை குறைந்தது 120-130 கி.மீ. அளவுக்குக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வ ஆவணங்களில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 205ஐ, திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லை வரை, இரண்டு வழி சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
கூடுதலாக, தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது.

"சாலை மேம்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கையில், தேவைக்கேற்ப பெரிய மற்றும் சிறிய பாலங்களின் கட்டுமானமும் அடங்கும்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/PetKCzM

Post a Comment

Previous Post Next Post