https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/5/16/w600X390/doctors.jpgதசய மரததவரகள தனமஇனற

ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி, மருத்துவ துறையில் பி.சி. ராயின்  அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள், தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  உலகின் பல நாடுகளில் மார்ச் 30 தான் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்ற போதிலும், இந்தியாவில்   மட்டும்தான் ஜூலை 1 அன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பரங்கிப்போர் என்ற ஊரில் 1882ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று பிறந்த பிதான் சந்திர ராய் [பி.சி. ராய்]. இவர் தன்  வாழ்நாள் முழுவதுமாக மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர். இலவசமாக மருத்துவம் செய்தவர். ஏழைகளுக்காக பல மருத்துவமனைகளை திறந்துவைத்தார். ஜடவ்ப்பூர் டி.பி. மருத்துவமனை, கமலா நேரு நினைவு மருத்துவமனை, விக்டோரியா மருத்துவ கல்லூரி,  சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை, ஆகியன பி. சி. ராய் முயற்சியால் நிறுவப்பட்டவை. அவர் தனது வீட்டையே ஏழைகளுக்கு மருத்துவமனைகட்டுவதற்காக வழங்கியுள்ளார். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மருத்துவத்தில் மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்று நாட்டு பணியில் சிறந்து விளங்கியவர். மேற்கு வங்கத்தில் 12 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ளார். தான் முதல்வராக இருந்த காலத்திலும் மருத்துவப் பணியை தொடர்ந்து  செய்துவந்தார்.  அதனால் இவருக்கு 1961 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1976 முதல் சிறந்த மருத்துவ சேவை செய்பவர்களுக்கு பி. சி. ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 அன்று  இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்  தினம் கொண்டாடப்படுகிறது. மருந்துகள் நோயைக் குணப்படுத்துகின்றன. ஆனால் மருத்துவர்களாலே நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்பது ஸ்விட்சர்லாந்து உளவியலாளர் கார்ல் ஜங் கருத்து.   மருத்துவர்களுக்கும் நோய்கள் இல்லாமல் இல்லை அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே. ஆனால் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக தானே நோயாளியாகும் மருத்துவர்களை மாமனிதர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டு 513 மருத்துவர்கள் இறந்துள்ளனர். மக்களின் உயிர் காக்க தங்களது உயிரையே துறந்த மருத்துவர்களை நினைவுகூர்வோம். மேலும் பல மருத்துவர்கள் கரோனா பக்கவிளைவுகளால் இன்னும் முழுமையாக மீண்டபாடில்லை. பல மாதங்களாக தங்களது குடும்பத்தை பிரிந்து, குழந்தைகளை பிரிந்து, அசவுகரியமான கரோனா பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு மருத்துவம் செய்த மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்களே.. வளமான  வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மருத்துவர்கள்  போற்றப்பட வேண்டிய  இந்த தருணத்தில் நோயாளிகளாலே மருத்துவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் போன்ற சம்பவங்கள் தொடர்வது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். சமீபத்தில் கடந்த மே மாதத்தில் கேரளத்தில் சந்தீப் என்பவர் குடிபோதையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இளம் மருத்துவர் வந்தனா சிகிச்சையளித்தார். அப்போது போதையில் இருந்த சந்தீப் வந்தனாவை கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தினார். இதில் மருத்துவர் வந்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற செயல்களால் மருத்துவர்களின் உயிருக்கான உத்திரவாதம் இல்லாமல் போகிறது. உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிப்போம். மருத்துவர்களின் பங்களிப்பினை இந்த மருத்துவர்கள் தினத்தில் மக்களுக்கு தெரிவிப்போம். அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/wVQviDp

Post a Comment

Previous Post Next Post