https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/14/large/989929.jpgபிரேரக் மன்கட், நிக்கோலஸ் பூரன் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ அணி

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேரக் மன்கட், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் அப்துல் சமத் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 36 ரன்களும் விளாசினர். லக்னோ அணி தரப்பில் கிருணல் பாண்டியா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post