https://ift.tt/X2QH5N1 2023 | 6,6,4,4,2,4... ஐபிஎல்லில் புதிய சாதனை - 'திறமையாளன்' ஜெய்ஸ்வாலை கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள்

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவரிலேயே சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. இவ்வளவு விரைவான வெற்றிக்கு காரணமாக இருந்தது ராஜஸ்தானின் ரைஸிங் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டமே.

ஜாஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பவுலிங்கை சிதறடித்த ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் குவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post