https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/04/large/938698.jpgரஞ்சி கோப்பையில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது கர்நாடகா அணி.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் உத்தராகண்ட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா அணி தரப்பில் வெங்கடேஷ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் கோபால் 161 ரன்கள் விளாசினார். ரவிகுமார் சமர்த் 82, கேப்டன் மயங்க் அகர்வால் 83 ரன்கள் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post