https://ift.tt/yG7l9gT 'திருமணம் எனும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு' - கல்யாணத்தில் நண்பர்கள் வைத்த கலகல பேனர்!

புதுக்கோட்டையில் காதலியை கரம்பிடித்த நண்பனை கலாய்க்கும் விதமாக அவருடைய நண்பர்கள் வைத்த போஸ்டரை அனைவரும் விநோதமாக பார்த்துச்சென்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தநாயகி என்ற பெண்ணை காதலித்து இன்று கரம்பிடித்து உள்ளார். அந்த தம்பதியினருக்கு அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ’திருமண நாளிதழ்’ என்ற தலைப்பில் பெயரிட்டு மணமகள் ஆனந்த நாயகியை காதலித்து மணமுடித்த குற்றத்திற்காக மணமகன் திருமுருகனுக்கு திருமணம் எனும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு என அவரது நண்பர்கள் பதாகை வைத்திருந்தை திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் விநோதமாக பார்த்துச் சென்றனர்.

image

அதேபோல அதே பதாகையில் கல்யாண மாலை என்ற தலைப்பில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் பயோடேட்டா குறிப்பிடப்பட்டு பதாகை வைத்திருந்தது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post