https://ift.tt/l3goqnd கல்லூரி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த கொடூரம்

காஞ்சிபுரத்தில்கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் இருவர் நேற்றிரவு குண்டுகுளம் பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர். இதைக் கண்ட நான்கு இளைஞர்கள் அவர்களை கத்தி முனையில் மிரட்டி கல்லூரி மாணவியை 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

image

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த ஊமை மணிகண்டன், விமல், ஊக்கு சிவகுமார், தென்னரசு, விக்னேஷ் ஆகிய 5 பேரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post