பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். இதனால் பெருங்களத்தூரில் ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். தாம்பரம் ரயில்நிலைய பேருந்துநிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, கடலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் மெப்சில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் குவிந்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று 4,950 பேருந்துகளில் 1.60 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News