https://ift.tt/D2aN7mo இபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் - விஜயபாஸ்கர்

அதிமுக சோதனைகளை தாண்டி கஷ்டங்களை கடந்து மீண்டும் மெகா கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் என முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை 16வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் அதிமுகவின் 51 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அதிமுக கட்சிக் கொடியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சோதனைகளை தாண்டி, கஷ்டங்களைக் கடந்து எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமையும் போது மக்கள் இன்றைக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்ற, இன்றைய காலத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். 

image

இன்றைக்கு மின்கட்டண உயர்வு மக்களுக்கு ஷாக்கடிக்க கூடியதாக உள்ளது. அதேபோல் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மீண்டும் மெகா கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்து மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post