https://ift.tt/vTsLk0P ’இந்தியை நியாயப்படுத்தி பேசுவதால் நான் ”இந்தி இசை” ஆகிவிட மாட்டேன்’ - ஆளுநர் தமிழிசை

உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் மொழி பற்று எங்களுக்கும் இருக்கிறது. தமிழிசைக்கும் அதே பற்று இருக்கிறது, ஏதோ நான் நியாயப்படுத்தி பேசினால் உடனே உங்களை எல்லாம் ஹிந்தி இசை என்று சொல்வதை நான் ஒத்து கொள்ள மாட்டேன் என்று பேசியுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33ஆவது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42ஆவது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் இந்தியை திணிக்கவில்லை, பாராளுமன்றத்தை பொறுத்த அளவில் அனைத்து உறுப்பினர்கள் இருந்தாலும், அதில் ஒரு சிலர் சிபாரிசு மட்டுமே செய்துள்ளனர்.

image

மாநில மொழிகளை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழிகளை மீறி செயல்பட வேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை. ஆனால் இதை வைத்து அரசியல் செய்யவே மீண்டும் மீண்டும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். உங்களுக்கு எவ்வளது தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் மொழி பற்று எங்களுக்கும் இருக்கிறது. தமிழிசைக்கும் அதே பற்று இருக்கிறது, ஏதோ நாம் ஞாயப்படுத்தி பேசினால் உடனே என்னை ”இந்தி இசை” என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.

image

இந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி முறையை கொண்டு வந்திருக்கின்றனர். இத்தனை வருடம் ஆட்சி செய்து என்ன செய்தீர்கள்?. ஏன் தமிழ்வழியில் ஒரு புத்தகம் கொண்டு வரமுடியாதா, தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா?.

image

அப்படிப்பட்ட முயற்சிகளை எடுங்கள், சும்மா இதையே சொல்லிக்கொண்டு இருக்காமல், தமிழில் புது புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்" என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post