திமுக நிர்வாகி ஒருவர் மேடையில் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுக பேச்சாளரின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி இருவரையும் டேக் செய்திருந்தார். இந்த நிலையில், அதற்கு பதில் அளித்ததோடு இல்லாமல் மன்னிப்பும் கேட்டுள்ளார் கனிமொழி.
அதில், ``ஒரு பெண்ணாகவும், மனுஷியாகவும் நான் அப்படி பேசப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும், அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. இந்தச் சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்
கனிமொழியின் பதிலுக்கு குஷ்புவும் நன்றி தெரிவித்துள்ளார்.
from Latest News