https://ift.tt/9Pq6C4a WC அலசல் | இது கோலியின் உலகக் கோப்பை? - உலக அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த 2-வது அரைசதம்

சிட்னியில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2வது ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 வரிசையான ரோஹித், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் வித்தியாசமான அரைசதங்களை எடுக்க நெதர்லாந்தை 56 ரன்களில் எளிதில் வீழ்த்தியது இந்தியா. அன்று பாகிஸ்தானை தனிநபராக ஊதிய விராட் கோலி இந்தப் போட்டியிலும் நிதானமாகத் தொடங்கி பிறகு பொங்கி எழுந்து அற்புதமான அரைசதத்தை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

அவரின் இந்த இன்னிங்ஸ், இந்த டி20 உலகக்கோப்பை கோலியினுடையது என்பதை அறிவுறுத்துவதாகவும் இனிவரும் டி20, ஒருநாள் போட்டிகள் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி இன்னொரு பெரிய 2வது இன்னிங்ஸிற்குத் தயாராவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விராட் கோலியின் இந்த பார்ம் மீட்பு, அவரது பழைய பார்மை விடவும் எதிரணிகளுக்கு அபாயகரமானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post