அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜக்டோ ஜியோ மாநாட்டில் புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜாக்டோ ஜியோ மாநாடு சென்னை தீவுத்திடல் நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் இருந்து பேருந்துகள் மூலம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "அரசும், அரசியலும் இரண்டற கலந்தது. இதனை யாராலும் பிரிக்க முடியாது. அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது. திமுக வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தான் முக்கிய காரணம். உங்களது ஆதரவு அரசுக்கு எப்போதும் உண்டு என்பதை தெரிவித்துள்ளதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிக எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள் அதனை நானும் நிறைவேற்ற தயாராய் இருக்கிறேன். தேர்தல் வாக்குறுதியை நான் மறக்க வில்லை, திமுக அரசு நிச்சயம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரும். நீங்களும் கொரோனோ தொற்றால் அரசுக்கு நிதி நிலைமை மோசமாக இருந்து வருகிறது. நிதி நிலைமை சரியான பிறகு முதல்வர் நிறைவேற்றி தருவார் என்று தெரிவித்துள்ளீர்கள். ஆகையால் நமது இருவருடைய எண்ணமும் ஒன்றாக தான் இருக்கிறது.
கடந்த ஆட்சியில் எடுக்கப்பட மோசமான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டது. போராட்ட காலத்தை பணி காலமாக மாற்றப்பட்டது. பிற மாநிலங்கள் போன்று அல்லாமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு கொரோனோ காலத்தில் ஊதியம் வழங்கப்பட்டது. மேலும் 1.7.2022 லிருந்து 31 சதவீத்தை 34 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகை 500 வழங்கப்பட்டது. கோரிக்கைகள் சிலவற்றை தற்போதும் ஒப்புதல் அளித்து விட்டு தான் வந்துள்ளேன், மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
மேலும் தற்காலிகமாக, பல்லாண்டுகளாக செயல்படாமல் உள்ள பணியமர்த்தல் அக்டோபர் முதல் செயல்படுத்தபடும். பள்ளி கல்வித்துறை மறுசீரமைப்பு அரசாணை 151 வாயிலாக 09.09.2022 அன்று பிறப்பித்துள்ளேன். தொடக்க கல்வி அரசு நிதி நிலை சீராக சீராக செயல்படுத்தப்படும். 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும் மகளிர் இவலச பேருந்து சேவை செயல்படுத்தப்பட்டது.
மேலும் காலை சிற்றுண்டி திட்டதை வரும் 15 தேதி தொடக்கிவைக்க உள்ளேன். கூட்டுறவு கடன் 5 சவரன் தள்ளுபடியால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் மற்ற மாநிலங்களை விட முன்னோக்கி செல்கிறோம். தமிழகம் தற்போது 52.3% வளர்ச்சியை எட்டியுள்ளது. மற்றும் இந்திய தணிக்கை நிறுவனம் ஏப்ரல்-ஜீன் இல் வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஏராளாமான முதலீடு தமிழகத்திற்கு வருகை தருகிறது. முழுமையான பிறகு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற துறை அமைச்சரோடு பேசலாம், அது எனது கவனத்தற்கு வரும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். உங்கள் ஒற்றை நம்பிக்கை பாத்திரமாக இருப்பேன், அது எப்போதும் வீண் போகாது. கருணாநிதி பல திட்டங்களை தீட்டி பல வசந்தங்களை ஏற்படுத்தினார். நடுவில் பத்தாண்டு காலம் சீரழிந்து போனது உங்களுக்கு தெரியும். இந்நிலையில் நான் சொல்லாததையும் நிறைவேற்றி தருவேன். உங்களால் உருவான ஆட்சி இது, உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்,
- பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு
- அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்
- 101 & 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது
G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News