சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுக என தனித்தனியாக விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய செலாளர் மகேந்திரன் தலைமையில் முதலில் நடைபெற்ற விழாவில் தேசியகீதம் பாடப்பட்டு 99 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டு அதே மாணவியரிடம் பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 99 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார்.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியும் பனையம்பள்ளி ஊராட்சியும் அதிமுகவினர் வசம் இருப்பதால் அதிமுகவினர் ஒரு விழாவும் திமுக ஆட்சி என்பதால் அரசு விழாவாக திமுகவினரும் விழா நடத்தியது மக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவுக்காக காலை முதலே பள்ளி மாணவியர்கள் விழா முடியும் வரை 4 மணி நேரம் காத்திருந்தனர். பள்ளியில் அரசியல் சாயம் பூசக்கூடாது என பொதுவான அனைவரின் கருத்தாக இருக்கும் நிலையில் போட்டிக்போட்டுக் கொண்டு விலையில்லா சைக்கிள் நிகழ்ச்சி நடத்தியது மாணவியர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News