உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96
கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.




எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி ஏப்ரல் 21, 1926 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார். 1952ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைந்த பின் அரசு பதவிக்கு வந்தவர் எலிசபெத். எலிசபெத் பிரிட்டனை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர்
from Latest News