https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/857583.jpgபேயர்ன் மூனிச் FC அணியின் போட்டோஷூட்: மத நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை ஏந்தாத இரு வீரர்கள்

ஜெர்மன் நாட்டு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தற்போது அந்த அணி ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bundesliga தொடரில் விளையாடி வருகிறது. Oktoberfest கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த அணியில் இடம் பெற்று விளையாடி வரும் Sadio Mané மற்றும் Noussair Mazraoui மது கோப்பையை கையில் ஏந்தாமல் போட்டோ எடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post