https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/27/large/853689.jpgகரோனாவுக்கு பிறகு கடந்த 7 மாதங்களில் 11.52 கோடி பயணிகள் வருகை - படிப்படியாக மீண்டுவரும் தமிழக சுற்றுலாத் துறை

சென்னை: கரோனா பேரிடருக்குப் பிறகு தமிழக சுற்றுலாத் துறை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 11.52 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருசில நாடுகளில் கரோனா பேரிடர் பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தில் பெரிய அளவில் சரிவைச் சந்தித்தன. அண்டை நாடான இலங்கை இதற்கு சரியான உதாரணமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post