திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளூர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதில் பேசிய ஆளுநர், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் விடிவெள்ளி என்றார். திருக்குறள் என்பது தற்போது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கி விட்டதாகவும், ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் மேலானது என்றும் பெருமிதத்தோடு கூறினார்.
மேலும், ஜி.பி.போப்பின் ஆங்கில மொழிப்பெயர்ப்பே சிறந்த திருக்குறள் மொழிப்பெயர்ப்பு என ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை தவிர்த்துள்ளனர், பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ,மொழிப்பெயர்ப்பில் திருக்குறளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்அறிஞர்கள் காலனி மொழிப்பெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான கருபொருட்களை வெளிக்கொணர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க: 'நான் பிஜேபி காரன் தகராறு பண்ணுவேன்' - திருப்பூர் பாஜக தலைவர் போலீசாருடன் வாக்குவாதம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News