”ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்” - ஆர்பி உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆர்பி உதயகுமார், “ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் அவர் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.  அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக உழைத்த குடும்பம் தங்களது குடும்பம் என்ற வரலாறு, கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது. மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றது, ஜெயலலிதா கவனத்திற்கு சென்று தன்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற ஆணையிட்டார்.

தொண்டர்களின் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை அதிமுகவை அழிப்பேன் என சூளுரைத்து செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே உதயாகுமாரை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்த வேண்டாம், சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம், திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

image

கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கையாக சொல்கிறேன். பொது வாழ்க்கையில் தூய்மையோடு உழைத்து கொண்டிருக்கிறேன்.

ஓபிஎஸ் வீட்டிலும் எனது வீட்டிலும் சொத்து குவிப்புகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால், நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன், நீங்கள் சொத்து குவித்ததாக அறிந்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா?. பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடத்தில் ஆகாது. தான் கட்சி நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். சுய லாபத்திற்காக பேசவில்லை.

இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post