கெரூர்: கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வழங்கிய 2 லட்ச ரூபாயை பெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்தவாரம் புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு மதத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். கல்வீசியும் தாக்கி கொண்டனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த பழக்கடைகள், காய் வண்டிகள் ஆகியவற்றை சேதப்படுத்தி தீ வைத்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்