https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/23/large/994514.jpgகுஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சிஎஸ்கே? - சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. அதேவேளையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே பங்கேற்ற 14 சீசன்களில் 12-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. லீக் சுற்றில் குஜராத் அணி 10 வெற்றிகளுடன் 20 புள்ளிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது. மேலும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. சிஎஸ்கே 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்திருந்தது.

முதல் தகுதி சுற்றான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியானது எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.அதில் வெற்றி பெறும்பட்சத்தில் 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழையலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post