https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/19/large/992523.jpgருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில் மேம்படுத்தப்படும் - உத்தராகண்ட் அமைச்சர் உறுதி

ருத்ரபிரயாக்: இந்திய சுற்றுலா வரைபடத்தில் இடம்பிடிக்கும் வகையில் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில் மேம்படுத்தப்படும் என்று உத்தராகண்ட் மாநில சுற்றுலா, மதம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சத்யபால் மகராஜ் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநில சுற்றுலாத் துறை சார்பில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோயிலில் தென்னகத்தில் செய்வதுபோல் அண்மையில் 108 வலம்புரி சங்கு பூஜை, கலசஸ்தாபனம், வேள்வி ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமிமலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், கார்த்திக் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post