https://ift.tt/Az0noEC 2023 | ஐபிஎல் பிளே ஆஃப் - கொல்கத்தா வெற்றியால் நெருக்கடி நிலையில் சிஎஸ்கே?

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேனின் அற்புதமான சுழற்பந்து வீச்சாலும், ரிங்கு சிங்குவின் பொறுப்பான பேட்டிங்காலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜடேஜா 24 பந்துகளில், 20 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post