https://ift.tt/QUjaE3e ரூ.1.1 லட்சம் வரை சம்பளம்; பழனி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?

கெயில் இந்தியா லிமிடெட்டில், வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலவே பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு குறித்த விவரங்கள் இங்கே:

வேலைவாய்ப்பு 1:

கெயில் இந்தியா லிமிடெட் 126 (சீனியர் அசோசியேட், ஜூனியர் அசோசியேட்) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் ஏப்ரல் 10 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். GAIL ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பின்படி, இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் ஆகும். 

சீனியர் அசோசியேட்டாக தேர்ந்தெடுக்கப்படுவோர், ரூ. 60,000 அளவிலும், ஜூனியர் அசோசியேட் ரூ. 40,000 அளவிலும் ஊதியம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விவரங்களுக்கு: GAIL Notification

image

வேலைவாய்ப்பு 2:

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் அலுவலக உதவியாளர், தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர், ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கு 8 வது படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், Engineering படித்தவர்கள் என அவரவர் தகுதிக்கு ஏற்றார்போல பல பணியிடங்கள் இருக்கிறது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான் விண்ணப்பிக்கலாம். நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என சொல்லப்பட்டுள்ளது. ஊதியம் 11,600 ரூபாய் முதல் 1,13,500 ரூபாய் ஊதியம் இருக்கு. www.palanimurugan.hrce.tn.gov.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை நேரடியாகவே, தபால் மூலமாகவே ஏப்ரல் 7 -ஆம் மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர்/ செயல் அலுவலர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பழனி- 624 601

திண்டுக்கல் மாவட்டம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post