நாட்டு மாட்டுச்சாணத்தில் தயாராகும் ‘செல்போன் ஸ்டாண்ட்’: உசிலம்பட்டி டு மும்பை செல்லும் கலைப்பொருட்கள் https://ift.tt/jmHuLV5

மதுரை: நாட்டு மாட்டுச்சாணத்தில் உருவாக்கப்படும் ‘செல்போன் ஸ்டாண்ட்’ உசிலம்பட்டியிலிருந்து மும்பை, ஹைதராபாத் அனுப்புவதற்கு தயாராகி வருகின்றன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 53). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் கலந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கை வேலைப்பாடாகவே உருவாக்கி வருகிறார். இதில் நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து மாவிலை தோரணங்கள், பூஜை பொருட்கள், விநாயகர், சரஸ்வதி, இயேசு போன்ற கடவுள் சிலைகள், கழுத்தில் அணியும் பாசி மாலைகள், நிறுவனங்களின் இலச்சினை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். தற்போது ‘செல்போன் ஸ்டாண்ட்’கள் உருவாக்கி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அனுப்பி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post