https://ift.tt/7Ek1T8G 'பலமுறை யோசித்துத்தான் இந்த பாதைக்கு வந்திருக்கிறேன்' - பரப்புரையில் கமல்ஹாசன் பேச்சு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசுகையில், ''பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தைப் பாருங்கள், எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம். பலமுறை யோசித்துத்தான் இந்த பாதைக்கு வந்திருக்கிறேன்'' என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post