https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/15/large/929862.jpgவரலாறு படைத்த இந்தியா | ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி

திருவனந்தபுரம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் கோலி மற்றும் சுப்மன் கில் என இருவரும் சதம் விளாசி அசத்தினர். அதே போல சிராஜ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் இந்திய அணி இந்த தரமான வெற்றியை பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த அபார ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post