https://gumlet.vikatan.com/vikatan/2022-09/0cab199c-1d10-4ee9-8de2-faf677ea747b/arrest__2_.jpgதிருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் கைது

திருப்பூர் புறநகர்ப் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குச் சென்ற 14 வயதான மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி போலீஸில் புகார் அளித்தனர்.

சித்தரிப்பு படம்

பாதிரியார் ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் பாதிரியார் ஆண்ட்ரூஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.



from Latest News

Post a Comment

Previous Post Next Post