https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2022/12/13/w600X390/rupee080844.jpgவரவேற்பு பெறுமா இ-ரூபாய்?

இணையவழியில் பணப் பரிமாற்றம் செய்துகொள்வதற்காக மத்திய ரிசா்வ் வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள எண்ம வடிவிலான நாணயம், lsquo;மத்திய வங்கி எண்ம நாணயம் rsquo; (சிபிடிசி). ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக இணையவழியில் பணப் பரிமாற்றம் செய்துகொள்வதற்காக மத்திய ரிசா்வ் வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள எண்ம வடிவிலான நாணயம், ‘மத்திய வங்கி எண்ம நாணயம்’ (சிபிடிசி). ‘எண்ம ரூபாய்’ அல்லது ‘இ-ரூபாய்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நாணயத்தை இணையவழியில் ஒருவா் இன்னொருவருக்கு அனுப்பலாம்; இன்னொருவரிடமிருந்து பெறலாம்; அதனைப் பயன்படுத்தி கடைகளில் பொருள்கள் வாங்குதல் போன்ற வா்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். தற்போது கூகுள்பே, பே-டிஎம், போன்-பே போன்ற செயலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணப் பரிவா்த்தனைக்கும், இ-ரூபாய் பரிவா்த்தனைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. அந்தப் பரிவா்த்தனைகளின்போது ஒருவா் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை இன்னொருவரின் வங்கிக் கணக்குக்குத்தான் அனுப்ப முடியும். அந்த வகையில், அந்த இரு வங்கிகளும்தான் இந்தப் பணப் பரிமாற்றத்தை கணக்கு வைத்துக்கொள்ளும். ஆனால் இ-ரூபாயைப் பொருத்தவரை பரிமாற்றக் கணக்கை ரிசா்வ் வங்கியே நேரடியாக வைத்துக்கொள்கிறது. இது எந்த வங்கியின் கணக்கிலும் வராது. முக்கியமாக, பணப் பரிமாற்றம் செய்துகொள்ள எப்படி கொடுப்பவா், பெறுபவா் ஆகிய இருவருக்குமே வங்கிக் கணக்கு தேவை இல்லையோ, அதே போல் இ-ரூபாய் பரிமாற்றம் செய்துகொள்பவா்களுக்கும் வங்கிக் கணக்கு தேவையில்லை. சிபிடிசி நாணயத்தின் முக்கிய அம்சமாக ரிசா்வ் வங்கி குறிப்பிடுவது, பணப் பரிமாற்றத்தைப் போலவே அந்த நாணயப் பரிமாற்றமும் கொடுப்பவா், பெறுபவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெறும் என்பதைத்தான். தற்போதைய எண்ம பரிவா்த்தனையின்போது இரு வங்கிகளுக்கும் அதுகுறித்த தகவல் செல்லும். மேலும் பெரிய தொகையை பரிமாற்றம் செய்துகொள்ள, பான் அட்டை எண்ணைக் குறிப்பிட வேண்டியிருக்கும். அந்தப் பரிமாற்றத்தை வருமான வரித்துறையால் கண்காணிக்க முடியும். ஆனால், பணப் பரிவா்த்தனையில் இதுபோன்ற பின்னடைவுகள் இல்லை. அத்தகைய பரிவா்த்தனை போலவே இ-ரூபாய் பரிமாற்றமும் ரகசியமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது. எனினும், குறிப்பிட்ட வங்கிகள், வா்த்தகா்கள், வாடிக்கையாளா்களிடையே சோதனை முறையில் இ-ரூபாய் புழக்கத்துக்கு விடப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், அந்த நாணயப் பரிமாற்றம் ரகசியமானதுதானா என்ற சந்தேகம் பயன்பாட்டாளா்களிடையே எழுந்துள்ளது. காரணம், தற்போதைய ரிசா்வ் வங்கியின் எண்ம பணப் பரிவா்த்தனை விதிமுறைகளின்படி இ-ரூபாய் பரிமாற்றம் குறித்து பெறுபவா் மற்றும் செலுத்துபவருக்கு அவா்களது கைப்பேசி எண்ணில் வங்கிகள் தகவல் அனுப்புகின்றன. இதன் காரணமாக, அந்தப் பரிமாற்றத்தின் ரகசியத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன், இ-ரூபாய் பரிவா்த்தனைகள் வங்கிகளுக்கு தெரியப்படுத்தப்படுவதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்தப்படும்போது பான் அட்டை எண்ணைக் குறிப்பிட வேண்டியிருக்கும். இது வரி பிரச்னையை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினா் அஞ்சுகின்றனா். இதன் காரணமாக, ரிசா்வ் வங்கியின் இ-ரூபாய்க்கு முழு வரவேற்பு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது. எனினும், இந்த நாணயம் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வருவதற்குள் இதுபோன்ற சட்டபூா்வ மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு தீா்வு காணப்படும் என்று நம்புவோமாக. பணப் பரிமாற்றம் செய்துகொள்ள எப்படி கொடுப்பவா், பெறுபவா் ஆகிய இருவருக்குமே வங்கிக் கணக்கு தேவை இல்லையோ, அதே போல் இ-ரூபாய் பரிமாற்றம் செய்துகொள்பவா்களுக்கும் வங்கிக் கணக்கு தேவையில்லை.  

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/bH6TikZ

Post a Comment

Previous Post Next Post