மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காட்டுப்பாக்கத்தில் 112 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 77 மி.மீ. மழையும், திருவள்ளூரில் 57 மி.மீ. மழையும், மாதவரத்தில் 78 மி.மீ. மழையும் சென்னை நுங்கம்பாக்கம் 97 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. காற்றின் வேகம் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. புயல் முழுவதுமாக கரையை கடக்க இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும் என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
புயல் காரணமாக பட்டினப்பாக்கம் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சென்னை காசிமேட்டில் 150-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமானதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த 500க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News