https://gumlet.vikatan.com/vikatan/2019-05/97e7d477-83d5-4e37-a5e9-949191e91a94/31824_thumb.jpgபுத்தாண்டு, பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்திலிருந்து ஜனவரி 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10-க்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

தெற்கு ரயில்வே

இதேபோல் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்திலிருந்து ஜனவரி 12- ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13-ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20-க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

பொங்கல்

திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியிலிருந்து ஜனவரி 17-ம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 -க்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20-க்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16-ம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9-க்கு திருநெல்வேலி சென்றடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 17-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20-க்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்." என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வே

ஏற்கனவே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாகர்கோவில் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் (06042), நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06020), தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06019) இயக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from மாவட்ட செய்திகள்

Post a Comment

Previous Post Next Post