கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்.
ஆனால், நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ ஆடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. முக்கியமாக அந்த அணியின் பயிற்சியாளர் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதுதொடர்பாக பேட்டியளித்த ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியின் தனக்கு செய்யப்பட்ட துரோகம் மற்றும் ரூனி குறித்தும் வெளிப்படையாக இப்படி பேசினார். “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம். நான் அவரை விட சிறந்தவன் என இங்கு சொல்லவில்லை” இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்